![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
கடந்த சில மாதங்கள் குரு உங்கள் ராசியில் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்ததால் நீங்கள் அதிக இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். ராகு மற்றும் கேது உங்கள் மனைவி/கணவன் மற்றும் பிற குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவை பாதித்திருந்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சனி பகவானோடு 3ஆம் வீட்டில் நல்ல நிலையிலும் இணைந்து சஞ்சரிப்பார்.
உங்களுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்கள், ஆனாலும், அவர்களை விட்டு நீங்கள் வெளியில் வந்து விடுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சமூக வட்டாரத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். ஆனால், இந்த அதிர்ஷ்டங்களை நீங்கள் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் பெறுவீர்கள்.
நீங்கள் பாகம் 2 மற்றும் பாகம் 4இல் இருக்கும் போது, உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு எதிரான சாதிகள் நடக்கலாம். உங்களுக்கு உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிதாக தேவைகளை முன் வைப்பார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வார் என்பது தான்.
Prev Topic
Next Topic