குரு பெயர்ச்சி (2021 - 2022) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நிதி / பணம்



Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021


பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022


குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், சனி பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நிதி வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள். உங்கள் பண வரத்து அதிகரிப்பதால் உங்கள் செலவுகளை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைத்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும். குறைந்த வட்டி விகிதத்திற்கு நீங்கள் வங்கியில் கடன் பெற தகுதி பெறுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) உங்களுக்கு அணைத்து அதிர்ஷ்டங்களும் கிடைக்கும்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4 இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர் /அக்டோபர் 2021 ஒரு மாத காலம்) உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து, விடயங்கள் மோசமாகாமல் பார்த்துக் கொள்வார். நீங்கள் பெரிய தொகை பணத்தை செலவு செய்யும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால், இது கடினமான நேரமாக இருந்தாலும், உங்களால் சமாளித்து விட முடியும். உங்கள் வங்கிக் கடன் போதிய ஆவணங்கள் சமர்பிப்பதால் ஒப்புதல் பெரும்.
சனி பகவான் மற்றும் குரு ஆகிய இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், அடுத்த ஒரு ஆண்டு காலம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் பகுதி-ஓய்வு பெற முயற்சிக்கலாம். ஏனென்றால், நீங்கள் போதிய பணத்தை ஈட்டி இருப்பீர்கள், மேலும் இரண்டாம் வருமானமும் (செயலற்ற வருமானம்) உங்கள் வருமானத்தை தற்போது அதிகரிக்கும்.

Prev Topic

Next Topic