குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை அலுவலகத்தில் அரசியல் (45 / 100)



குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் உத்தியோக வாழ்கையை பாதிப்பார். சனி பகவான் உங்களுக்கு அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிக்க நல்ல பாதுகாப்பை தருவார். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் அதிகமாக இருக்கும். நீங்கள் அவமானப்படும் சூழலும் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தையும் இழக்க நேரலாம். உங்கள் ஒப்பந்தம் புதுபிக்க முடியாமல் போகலாம். உங்கள் வாழ்க்கை எதை நோக்கி போகிறது என்ற எந்த யோசனையும் இல்லாமல் இருப்பீர்கள்.



தொழிலதிபர்களுக்கு இது ஒரு மோசமான பாகமாக இருக்கும். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் குடியேற்ற பலன்கள் தேக்கம் அடையலாம். உங்கள் நிதி நிலை இந்த பாகத்தில் மோசமாக இருக்கும். உங்களுக்கு அவசர செலவுகள் ஏற்படலாம் என்பதை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். பண விடயங்களிலும் நீங்கள் இந்த பாகத்தில் ஏமாற்றப்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.



Prev Topic

Next Topic