![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | காதல் |
காதல்
Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், உங்களுக்கு இந்த ஆண்டும் ஏற்றம் இறக்கம் என்ற இரண்டு பலன்களும் கலந்து வரும். பாகம் 1 மற்றும் 5 இல் நீங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயரும் போது நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். சனி பகவான் இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் பெறுவீர்கள். திருமணம் ஆன தம்பதியனர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு அதிக ஆர்வம் காட்ட்வீர்கள்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4இல் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். மேலும் நீங்கள் வேறு மதம், ஊர் அல்லது இனத்தவரிடம் ஈர்க்கப்படலாம். உங்கள் காதல் விடயத்தால் உங்கள் குடும்பத்தில், இரதரப்பு குடும்பத்தினர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதியினர் மிக மோசமான நேரத்தை சந்திப்பார்கள். நீங்கள் ஆணாக இருந்தால், குழந்தை பேறுக்கு திட்டமிடலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால், ஜூன் 2௦ 2021 முதல் நவம்பர் 2௦. 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Prev Topic
Next Topic