![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 – 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக ராசி
Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் கடந்த பெயர்ச்சியில் சஞ்சரித்து, உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களில் வளர்ச்சியை பாதித்திருந்திருப்பார். இருப்பினும், சனி பகவான் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி போகாமல் இருக்க செய்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார், என்பது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
ராகு உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ஆனால் குரு ராகு மற்றும் கேதுவின் பாதகமான தாக்கத்தை குறைக்க உதவுவார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் அதிகப்படியான நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பாகம் 1, 3 மற்றும் 5 இல் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கு பெரிய அளவு வெற்றியைத் தரும். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெறுவீர்கள். புது வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வெளிநாட்டிற்கு பயணம் போன்ற நல்ல பலன்கள் உங்களுக்கு உண்டாகும்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4 இல் உங்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம். குரு மீண்டும் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயரும் போது உங்களுக்கு சிறு உடல் நல பிரச்சனைகள், ஏற்படலாம், மேலும் அலுவலகத்தில் அரசியல் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் பாகம் 2 மற்றும் 4 இல் கவனமாக இருந்தால், சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், அனேக நேரங்களில் குருவின் பலத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து, சுதர்சன மகா மந்திரம் கேட்டு உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic