குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஜூன் 20, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை நிதி பிரச்சனைகள் / சொத்துக்கள் குறித்த பிரச்சனைகள் (45 / 100)



குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது உங்களுக்கு சாதகமான செய்தி இல்லை. ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் பாதகமான தாக்கங்களை தந்து இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக பாதிப்புகளை சந்திப்பீர்கள். சனி பகவானும் வக்கிர கதி அடைவதால், நீங்கள் எந்த பிரச்சனைகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். உங்கள் உடல் நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகள் இருந்தாலும், அதனை நீங்கள் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடலாம்.


இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்து விடுவது நல்லது. குடும்பத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் கடுமையாகும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கை பாதிக்கும் வகையில் கடுமையான வாக்குவாதங்கள் உங்களுக்கு அவர்களுடன் ஏற்படலாம். உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். தொழிலதிபர்கள் அதிக பிரச்சனைகளை போட்டியாளர்களிடம் இருந்து சந்திப்பார்கள். உங்களுக்கு புதிதாக சட்டம் மற்றும் வருமான வரி பிரச்சனைகள் ஏற்படலாம்.

முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெரும் விடயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கலாம். உங்கள் சேமிப்பை பாதிக்கும் வகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. உங்களிடம் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் இருந்தால், அதனால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். அது பராமரிப்பு சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது உங்கள் வீட்டில் குடி இருப்பவர்களால் ஏற்படும் பிரச்சனையாகவோ இருக்கலாம். பங்குகளில் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். இந்த பாகத்தில் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தவிர்த்து விடுவது நல்லது.



Prev Topic

Next Topic