![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை கலவையான பலன்கள் (60 / 100)
குரு மீண்டும் மகர ராசிக்கு பெயர்ந்து சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பார். இந்த பாகத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும், ஆனால் நல்ல பலன்கள் அதிகமாகவே இருக்கும். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். உங்களுடன் வேலை பார்க்கும் பிரச்சனைக்குரிய ஊழியர்கள் அல்லது உங்கள் மேலாளர் விடுப்பில் சென்றிருப்பதால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் மனைவி/கணவன் உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். உங்கள் குழந்தைகள் தங்கள் தவறுகளை உணருவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம். அப்படி இல்லை என்றால், நவம்பர் 2021 வரை காத்திருக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். இருப்பினும், முடிந்த வரை பணம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் தருவதையோ தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் பங்கு சந்தையில் பங்குகள் வாங்க முயற்சிக்கின்றீர்கள் என்றால், அதன் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், பங்கு சந்தையில் புதிதாக பணத்தை முதலீடு செய்ய முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது.
Prev Topic
Next Topic