குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்



Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021


பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022


குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கும், மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுக்கு விண்ணைத் தொடும் லாபம் உண்டாகும். நீங்கள் ஆப்சன், ப்யூச்சர் மற்றும் கம்மொடிட்டீஸ் போன்ற வர்த்தகத்தில் நல்ல பணத்தை ஈட்டுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை காண, அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றை நீங்கள் முயச்சி செய்து பார்க்கலாம். ஆனால், இந்த அதிர்ஷ்டத்தை நீங்கள் பாகம் 1 ( ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) இருக்கும் காலகட்டத்தில் மட்டுமே காண முடியும்.

நீங்கள் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும் 5 மாத காலத்திற்கு ஸ்பெகுலேடிவ் மற்றும் நாள் வர்த்தகத்தை தவிர்த்து விட வேண்டும். ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம். சனி பகவான் மற்றும் குரு உங்களுக்கு சாதகமான நிலையில் இணைந்து சஞ்சரிப்பது ஒரு அறிய சஞ்சாரம். ஆனால், அப்படி நடந்தால் அந்த சஞ்சாரத்தால் உங்களுக்கு பண மழை பொழிந்து நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டாகும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் நவம்பர் 2௦, 2021க்கு மேல் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், 2022 வாக்கில் உங்களுக்கு மேலும் அதிக அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது தன். ஏனென்றால், ஏப்ரல் 13, 2022 அன்று நடக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு மேலும் சிறப்பாக உள்ளது.

Prev Topic

Next Topic