குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்தியோகம்



Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். உங்கள் உத்தியோக வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்து, அலுவலகத்தில் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் உங்கள் அந்தஸ்த்தை மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகம் மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை என்றால், நீங்கள் புதிய வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்கள் புது வேலை வாய்ப்பு சிறப்பான சம்பளம் மற்றும் பதவியோடு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டு இடமாற்றம், குடியேற்ற பலன்கள் போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் இந்த அதிர்ஷ்டன்களைப் பெறுவீர்கள்.


ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சில பின்னடைவுகளையும், தாமதங்களையும் தரலாம். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பை தருவார். அதனால், நீண்ட கால ப்ராஜெக்ட் பெரும் முயற்சிகளில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் வேலை பளு காரணமாக நீங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். இதனால் போதிய தூக்கம் இல்லாமல், சக்தி குறைந்து உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் அரசியல் ஏற்படலாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாகலாம். உங்கள் அலுவலகத்தில் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். யாரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து விடுவது நல்லது. அதனால் உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படலாம். நீங்கள் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் பொறுமையாக இருக்க முடியும் என்றால், அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். இதனால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது, உங்களுக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் உண்டாகும்.


Prev Topic

Next Topic