![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021 -
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021 -
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
தொழிலதிபர்கள் முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி பகவான் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் உங்களுக்கு எதிரான நிலையில் சஞ்சரிக்கும் போது கசப்பான அனுபவங்களை சந்திப்பார்கள். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை பெரும் அளவு பாதிப்பார். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெற்று உங்கள் வளர்ச்சியை பாதிக்க முயற்சிப்பார்கள். நீங்கள் கவனமாக இல்லை என்றால், துரோகங்கள் காரணமாக நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் கொடுப்பதையோ அல்லது பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது.
பாகம் 2 மற்றும் 4 இல் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும் . இதனால் நீங்கள் உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த உதவியாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கடனை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள், மேலும் கடன் குறையும். மேலும் நீங்கள் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்வீர்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த எண்ணினால், உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும்.
Prev Topic
Next Topic