![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021 -
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021 -
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
தற்போது நடக்கும் குரு பெயர்ச்சியால் ராகு, கேது மற்றும் சனி பகவானின் சாதகமற்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம். பாகம் 1 மற்றும் 5 இல் உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட முயற்சிப்பது நல்லது. ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிக்க நேரலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அவப்பெயரும் உண்டாகலாம். திருமணம் ஆன தம்பதியினர் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதனால் அவர்கள் தற்காலிகமாக பிரியவும் நேரலாம்.
ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, உங்களுக்கு பெரும் அளவு நிவாரணம் கிடைக்கலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்வீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் இந்த காலகட்டத்தில் திருமணம் நிச்சயிக்கும் முயற்சியில் வெற்றிப் பெறுவீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்களை நிகழ்த்தலாம்.
Prev Topic
Next Topic