குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல் நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021 -
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021 -
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

இரண்டு சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் நல்ல இடத்தில் சஞ்சரிக்காததால், நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். குரு பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் நல்ல இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், உடனடியாக சரியான மருந்து கிடைத்து, நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்கள் மருத்துவ செலவுகளை நீங்கள் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடுவீர்கள்.


ஆனால் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குருவின் பாதிப்புகள் அதிகமாக உணரப்படும். கேது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்கள் மனைவி/கணவனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் பெற்றோர்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவார். இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை சாதகம் இல்லாமல் இருந்தால், நீங்கள் மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகலாம்.

Prev Topic

Next Topic