![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | காதல் |
காதல்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021 -
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021 -
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
கேது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குருவின் பாதகமான சஞ்சாரத்தாலும், உங்கள் காதல் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இந்த ஆண்டு அனேக நேரங்களில் மிகவும் பாதிக்கப்படலாம். பாகம் 1 மற்றும் 5 இல் நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிவும் வாய்ப்பு உள்ளது. சர்ப்ப கிரகங்கள் சாதகமற்ற பெயர்ச்சி அடைய உள்ளதால், முடிந்த வரை புதிதாக உறவைத் தொடங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது.
பாகம் 2 மற்றும் 4 இல் சில முன்னேற்றங்கள் ஏற்படும். நீங்கள் உங்கள் திருமணத்தை நோக்கி முன்னேறக்கூடிய நேரமாக இந்த காலகட்டம் இருக்கும். திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் விலகி, ஒன்றாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நீங்கள் குழந்தை பேறுக்கு திட்டமிட்டால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic