குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் படிப்பு பாதிக்கப்படலாம். உங்களுக்கு தேவை இல்லாத எண்ணங்கள் தோன்றலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு, தீய நண்பர்களின் வட்டாரத்தில் சேர்ந்து அடிமையாகி விட நேரலாம். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். உங்கள் பள்ளி/பல்கலைகழக பேராசிரியருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி அல்லது உங்கள் பெற்றோர்களின் உதவி பெற்று பாகம் 1 மற்றும் பாகம் 5 ஆகிய சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.


ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இருப்பினும், உங்கள் பேராசிரியர்கள் மற்றும் பள்ளி நிறுவனத்திடம் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால், உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், யாரை பற்றியும் புகார் கூறுவதை தவிர்த்து விடுவது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் குரு உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களால் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

Prev Topic

Next Topic