குரு பெயர்ச்சி (2021 - 2022) (பாகம் ஒன்று) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை கடுமையான பின்னடைவுகள் (35 / 100)



கடந்த நாட்களில் குரு நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தந்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்வதால் உங்களுக்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்படலாம். சனி பகவானும் முன்பே சாதகமற்ற நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படலாம். மேலும் உங்களுக்கு அதிக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.


அலுவலகத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படும். நீங்கள் அலுவலகத்தில் செய்யும் வேலைகள் உங்கள் முதலாளிக்கு மகிழ்ச்சி தராமல் போகலாம். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யவும் இது ஏற்ற நேரம் இல்லை. தொழிலதிபர்கள் போட்டியாளர்களிடம் இருந்து அதிகரிக்கும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். உங்கள் செலவுகள் விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கும். நீங்கள் வீடு அல்லது வாகன பராமரிபிற்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம்.

முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. எனினும், புண்ணியத்தலங்கள் செல்ல முயற்சிக்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலை அடையலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னர், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.



Prev Topic

Next Topic