![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை நல்ல அதிர்ஷ்டம், ஆனால் பதற்றம் (80 / 100)
நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த சிறப்பான நேரமாங்க இந்த காலகட்டம் உங்களுக்கு இருக்கும். குரு உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானத்தில் பலம் பெறுகிறார். இதனால் சனி பகவானின் பாதிப்புகள் இருக்காது. இந்த சஞ்சாரம் உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி நல்ல அதிர்ஷ்டத்தை தரும். சனி பகவான் மற்றும் குரு இணைந்து சஞ்சரிக்கும் இறுதி பாகமாக இந்த பாகம் இருக்கும். அடுத்த 18 ஆண்டுகளுக்கு இது போன்ற சஞ்சாரத்தை காண முடியாது.
கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அலுவலகத்தில் நீங்கள் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு சிறப்பான சம்பளத்தோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு புது வேலை வாய்ப்பும் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தை பெறுவார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் உங்களுக்கு விண்ணைத் தொடும் லாபம் உண்டாகும். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் 5 – 6 வாரங்களுக்கு மட்டுமே ஒரு குறுகிய காலகட்டத்திற்கு இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரைந்து நல்ல முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic