குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

காதல்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், சனி பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் காதல் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அனேக நேரங்களில் இன்னல்களை சந்திப்பீர்கள். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் பிரியும் வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உங்களுக்கு நேரம் மிக மோசமாக உள்ளது.

முடிந்த வரை புதிய உறவை தொடங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் உண்மையான காதலோடு அணுகினாலும், நீங்கள் ஏமாறவும், அவமானப்படவும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீங்கள் அவமானப்படும் சூழலும், உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.



பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு சில முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொள்ள முன் வருவீர்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபாட்டை புரிந்து கொண்டு, மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்க்கையை வாழத் தொடங்குவார்கள். நீங்கள் குழந்தை பேறுக்கு திட்டமிடுகின்றீர்கள் என்றால் அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணமும் நடக்கும்.

Prev Topic

Next Topic