குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


2021 – 2022 குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் நல்ல நிலையில் கடந்த சில மாதங்கள் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தந்திருப்பார். எதிர்பாராவிதமாக, குரு தற்போது உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். சனி பகவான் மற்றும் ராகு உங்களுக்கு நிலையற்ற மன எண்ணங்களை உண்டாக்குவார்கள். அனால் கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள், ஆலோசகர்கள் அல்லது குருக்கள் மூலம் சிறப்பான உதவியை செய்வார்.

உங்கள் உடல் நலம் குறித்த விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறாமை மற்றும் கண் திரிஷ்டியால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். அதிகரிக்கும் நிதி பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள்.



பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சுப காரியங்கள் நடத்த வேண்டும் என்றால், அதனை நீங்கள் பாகம் 4 (அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை) உள்ள காலகட்டத்தில் செய்ய முயற்சிக்கலாம். சிறப்பான பலனைப் பெறுவீர்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்தே நீங்கள் செயல்பட வேண்டும்.

இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு மன உளைச்சல்களை உண்டாக்குவார். சொந்த வாழ்க்கையிலும், குடும்பத்திலும் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்களுக்கு பணத்தின் மீது இருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை இருக்கும் இந்த பெயர்ச்சி காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.

Prev Topic

Next Topic