குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

ஜூன் 20, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை சிறப்பான முன்னேற்றம் (60 / 100)



குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு சிறப்பான நிவாரணத்தை தருவார். வக்கிர கதி அடையும் சனி பகவான் உங்களுக்கு இந்த பாக காலகட்டத்தில் நல்ல பலனைத் தருவார். உங்கள் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் உங்களுக்கு நேர்மறை சக்த்திகள் கிடைக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் உங்கள் மகன் மற்றும் மகளின் காதல் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம்.



உங்கள் வேலை பளு குறையும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். போனஸ் மற்றும் நிதி சன்மானங்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலையில் சிறப்பான முனேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளையும் இந்த காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. பயணம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.




Prev Topic

Next Topic