![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து வக்கிர கதி அடையும் சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பதால், நீங்கள் இந்த பாக காலகட்டத்தில் கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், விடயங்கள் மோசமாகாது.
உங்கள் அலுவலக வாழ்க்கை சற்று மந்தமாக இந்த காலகட்டத்தில் இருக்கும். யாருடனும் அதிக உடைமையோடும், அல்லது உணர்ச்சிவசப்படும் அளவும் பழகாமல் இருப்பது நல்லது, அது உங்களுக்கு பிரச்சனைகளை அதிகரித்து விடலாம். உங்கள் வேலை பளு மிதமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புது வேலை வாய்ப்பு போன்ற நல்ல மாற்றங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் ஒரு தேக்க நிலையை காண்பார்கள். பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். பங்கு சந்தை வர்த்தகம் நீங்கள் எதிர்பார்த்த அதிர்ஷ்டத்தை தராமல் போகலாம். நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்கின்றீர்கள் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic