![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
தற்போது நடக்கும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பாகம் 1 மற்றும் பாகம் ௫இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். சனி பகவான் மற்றும் ராகு இந்த காலகட்டத்தில் மோசமான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவு பண இழப்பை பங்கு சந்தை வர்த்தகத்தில் உண்டாக்குவார்கள். நீங்கள் பங்கு சந்தை வர்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில், பாகம் 4 ஐ தவிர தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுக்க முயற்சிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். சில இழப்புகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்கள் வளர்ச்சியின் வேகம் மற்றும் நிவாரணத்தின் அளவு உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே, நீங்கள் குறிப்பாக பாகம் 4 இல் நல்ல லாபத்தை காண முடியும். புது வீடு வாங்கி குடி பெயரும் முயற்சியில் வெற்றிப் பெறுவீர்கள். இன்சூரன்ஸ் மற்றும் வழக்கில் இருந்து உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
Prev Topic
Next Topic