![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கல்வி |
கல்வி
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
கடந்த ஒரு ஆண்டு காலமாக நீங்கள் பெரும் அளவு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் ஏப்ரல் 13, 2022 முதல் சஞ்சரித்து உங்களுக்கு கடந்த மாதங்களில் ஏற்பட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளியில் வர உதவி செய்வார். நீங்கள் புகை மற்றும் மது போன்றவற்றிற்கு அடிமையாகி இருந்தால், அத்தகைய பழக்கங்களில் இருந்து முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள்.
கடந்த நாட்களில் நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் இப்போது உணருவீர்கள். பரிச்சையில் சிறப்பாக செயல்படுவீர்கள். குறிப்பாக பாகம் 1, 4 மற்றும் 5. உங்களுக்கு சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் இருந்து சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் புதிய நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நெருங்கிய நட்போடு இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், மே 2022 வாக்கில் அல்லது நவம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வாக்கில் உங்கள் தீசிஸ் ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டப்படிப்பையும் முடிப்பீர்கள்.
Prev Topic
Next Topic