![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
அக்டோபர் 2021 முதல் நீங்கள் கசப்பான அனுபவங்களையும் வலி மிகுந்த சம்பவங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். நீங்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் அவமானப்படும் சூழல் இருந்திருந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இப்போது உங்கள் வாழ்க்கையில் நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு போதிய சக்தி கிடைக்கும். சட்ட சிக்கல்கள் இருந்திருந்தால், அதில் கிடைக்கும் தீர்ப்புக்கு பிறகு நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர் உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். ஏனென்றால், ஜனவரி 2023 முதல் உங்களுக்கு ஜென்ம சனி தொடங்க உள்ளது. இது உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் அலை போன்ற புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் பாகம் 1, 4 மற்றும் 5 இல் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உத்தியோகம், பயணம் அல்லது சொந்த காரணங்களால் தற்காலிகமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், மீண்டும் அவர்களுடன் சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கு நவம்பர் 24, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரி இருக்கும் காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு அழுத்தம் நிறைந்ததாக இருந்தாம், நீங்கள் உங்கள் முயற்சிகளால் நிறைவேற்றிவிடுவேர்கள். நீங்கள் ஜூலை 29, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரையிலான காலகட்டத்தில் மிகவும் பொறுமையாக இருந்து உங்களுக்கு இருக்கும் சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic