குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை கடின உழைப்புடன் அதிர்ஷ்டங்கள் (65 / 100)


இந்த பாகத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருக்கும். ஜனவரி 17, 2023 முதல் உங்குக்கு ஜென்ம சனி தொடங்க உள்ளது. மார்ச் 28, 2025 அன்று தான் நீங்கள் இதில் இருந்து வெளியில் வருவீர்கள். குரு மற்றும் ராகுவிடம் இருந்து இந்த பாகத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள்.
உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல மாற்றங்களைப் பெறுவீர்கள். ஜென்ம சனியின் தாக்கம் இப்போது பெரிதாக இருக்காது. நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் உண்டாகும், ஆனால் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வங்கிக் கடன் விரைவாக ஒப்புதல் பெரும்.


உங்கள் அலுவலகத்தில் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிப்பீர்கள். மேலும் உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள். இந்த பாகத்தில் உங்களுக்கு நல்ல வெகுமதிகளும் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம். நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு உங்களுக்கு பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். ஜென்ம சனி குறிப்பாக IRA கணக்கு, சேமிப்பு நிதி, 401 – K ரிடையர்மென்ட் போன்றவற்றில் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.


Prev Topic

Next Topic