![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
அக்டோபர் 2021 முதல் நீங்கள் அதிரிக்கும் கடனால் மிகவும் மோசமான பாகத்தை சந்தித்து இருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்சியாவதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் விரைவாக உங்கள் கடனை குறைத்துவிடுவீர்கள். உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைத்துவிட இது நல்ல நேரம். உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் நீங்கள் பேசி உங்கள் கடனை அடைத்துவிட முயற்சி செய்யலாம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார்கள். நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் சம்பளம் மொத்தமாக கிடைப்பதால் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து செட்டில்மென்ட் கிடைப்பதால் ஒரு பெரியத் தொகை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் பாகம் 2 மற்றும் 3 இல் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையற்ற உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். உங்கள் மருத்துவ மற்றும் பயண செலவுகள் குறையும். உங்கள் வங்கிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பம் குறைந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். பாகம் 1, 4 மற்றும் 5 இல் உங்களுக்கு அதிக அதிர்ஷ்டங்கள் உண்டாகும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்களால் பணம் தந்து வாங்க முடிந்த சொத்துக்களை மற்றும் வாங்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு கடுமையான நிதி பிரச்சனைகள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic