![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை சற்று நிவாரணம் (55 / 100)
குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல மாற்றங்களைத் தருவார். ஆனால் சனி பகவான் ஏப்ரல் 28, 2022 வாக்கில் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஜென்ம சனியின் தாக்கத்தை அதிகரிக்கும். குரு மற்றும் ராகுவிடம் இருந்து நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். ஆனால் சனி பகவான் மற்றும் கேது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள்.
உங்களுக்கு உடல் உபாதைகளும் மருத்துவ செலவுகளும் உண்டாகும். ஆனால் குருவின் பலத்தால் உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சரியான சிகிச்சைப் பெற்று நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். குரு உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவை மேம்படுத்த உதவி செய்வார். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் பெண்ணாக இருந்தால், குழந்தை பேறுக்கு திட்டமிட நினைத்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனைப் பார்க்க வேண்டும்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் அதிகரிக்கும். ஆனால் உங்கள் ப்ரோஜெக்ட்டை நீங்கள் சரியான நேரத்தில் முடிந்த்டுவிடுவீர்கள். உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற வெகுமதிகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருந்தால் மட்டுமே பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்லப் பாலனைத் தரும்.
Prev Topic
Next Topic