![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (75 / 100)
இந்த குரு காலத்திலேயே இது உங்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும். நீங்கள் குரு மற்றும் ராகுவிடம் இருந்து உங்கள் சக்திகளை மீண்டும் பெறுவீர்கள். யோகா, மூச்சு பயிற்சி போன்றவற்றை செய்து நீங்கள் நேர்மறை சக்திகளைப் பெறுவீர்கள். கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள்.
உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால், உங்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். ஆனால் இது ஒரு குறுகிய காலம் என்பதால் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து நீங்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர முயற்சி செய்ய வேண்டும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சுப காரியங்கள் நிகழ்த்தும் போது அதிக செலவுகளும் மன அழுத்தமும் ஏற்படலாம்.
உங்களுக்கு தற்போது சரியான உத்தியோகம் இல்லாமல் இருந்தால், குறைந்த சம்பளமாக இருந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் வேலை பளு மற்றும் அலுவலகத்தில் இருக்கும் அரசியல் குறையும். தொழில்முனைவோர்கள் நல்ல பணவரத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு ப்ரோஜெக்ட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு நீங்கள் பயணம் செய்யலாம். நீங்கள் இந்த பாக காலகட்டத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic