குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

உடல்நலம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

ஜென்ம குருவின் காரணத்தால் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து சரியான சிகிச்சை, கவுன்சலிங் மற்றும் ஆன்மிகம் மற்றும் சோதிடம் போன்றவற்றின் மூலம் நீங்கள் விரைவாக குணமடைய உதவி செய்வார். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு விரைவாகவே நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு சரியான சிகிச்சை கிடைத்து நீங்கள் விரைவாக குணமடைவீர்கள்.


புகை அல்லது மது போன்றவற்றிற்கு நீங்கள் அடிமையாகி இருந்தால் அதில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புசத்து மற்றும் சர்கரையின் அளவு சீராக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறைவாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

Prev Topic

Next Topic