![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | காதல் |
காதல்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
காதலர்கள் அக்டோபர் 2021 முதல் பீதி அடையும் நிலையில் இருந்திருப்பார்கள். விடயங்களும் மிகவும் மோசமாக நிகழ்திருக்கும். பெப்ரவரி அலல்து மார்ச் 2022 வாக்கில் நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு நிகழ்ந்த திருமண நிச்சயமும் நின்றிருக்கும். இதனால் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்நிலையில் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்பட்டிருக்கும்.
குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய உங்களுக்கு நல்ல பலத்தை தருவார். அப்படி அது நடக்கவில்லை என்றால், நீங்கள் மே 2022 வாக்கில் ஒரு புதிய உறவைத் தொடங்க தயாராக இருப்பீர்கள். நீங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் நவம்பர் 24, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைத்து திருமணமும் நடந்துவிடும்.
திருமணம் ஆன தம்பதியினர் பாகம் 1, 4 மற்றும் 5 ஆம் பாகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவீர்கள். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையையும் நீங்கள் செய்து கொள்ள முயற்சிக்கலாம். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். ஜனவரி 2023 வாக்கில் உங்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் வரும் இந்த சிறப்பான நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic