![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை தக்க நிலை (40 / 100)
குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு தேக்க நிலையை உண்டாக்குவார்கள். விடயங்களில் எந்த திசையிலும் முன்னேற்றம் இல்லாமல் தேக்கம் அடையும். உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆயுர்வேத / சித்த வைத்தியம் செய்து கொள்வதால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சுமாராக இருக்கும். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
இந்த பாகத்தில் உங்களுக்கு எதிராக அலுவலகத்தில் அரசியல் அதிகமா இருக்கும். உங்கள் முதலாளி உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்களுக்கு கிடைக்க இருக்கும் பதவி உயர்வில் தாமதங்கள் ஏற்படலாம். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. தொழில்முனைவோர்கள் தங்களுக்கு எதிரான கடுமையான போட்டி மற்றும் சதிகளால் பாதிக்கப்படுவார்கள். உங்கள் செலவுகள் விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கும். வீடு மற்றும் வாகன பராமரிபிற்காக நீங்கள் அதிகம் செலவு செய்வீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் புண்ணிய தளங்கள் செல்ல மட்டுமே திட்டமிடலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்களில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த பாகத்தில் உங்களால் எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் இந்த பாகத்தை கடக்கும் வரை மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic