குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

வேலை / உத்தியோகம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

அக்டோபர் 2021 முதல் நீங்கள் மிகவும் மோசமான பாகத்தை கடந்து வந்திருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால், நீங்கள் அவமானப்படும் ஏற்பட்டிருக்கும் மேலும் உங்களுக்கு எதிரான துரோகங்களையும் நீங்கள் சந்தித்து இருந்திருப்பீர்கள். பெப்ரவரி அல்லது மார்ச் 2022 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏப்ரல் 15, 2022 க்கு பிறகு குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்கள்.


பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நல்ல ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். நவம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அடுத்த நிலைக்கு செல்ல பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் தற்போது ஏழரை சனி காலத்தில் இருப்பதால், உங்களது கடின உழைப்பிற்கு பிறகு நீங்கள் நிச்சயம் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.
ஏழரை சனியின் பாதகமான தாக்கம் குருவின் பலத்தால் குறைவாக இருக்கும். வெளிநாட்டிற்கு நீங்கள் இடமாற்றம் செய்ய இது சிறப்பான நேரமாக உள்ளது. உங்கள் உத்தியோக வாழ்க்கையை நீங்கள் எளிதாங்க சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், ஜனவரி 2023 வாக்கில் உங்களுக்கு அது கிடைக்கும். உங்கள் நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர, இடமாற்றம், உள்நாட்டு இடமாற்றம் போன்ற பலன்களை நீக்னால் எளிதாகப் பெறுவீர்கள்.
குறிப்பு: ஏப்ரல் 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டம் ஜென்ம சனியின் பாதகமான தாக்கம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு கடுமையான சோதனை காலமாக இருக்கும். தற்போது இருக்கும் இந்த குரு பெயர்ச்சி காலத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக பெப்ரவரி 2023 க்கு முன் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்ய வேண்டும்.

Prev Topic

Next Topic