![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கல்வி |
கல்வி
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
மாணவர்கள் இப்போது சவால் நிறைந்த காலத்தை சந்திப்பார்கள். உங்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்த்த பள்ளி அல்லது பல்கலைகழத்தில் சேர்க்கை கிடைப்பது போன்ற விடயங்களில் உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் இடம், படிப்புத் துறை அல்லது பல்கலைகழகம் போன்றவற்றில் சிலவற்றில் விட்டுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், ஜூலை 29, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 மாதங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளி நிவாகத்திடம் இருந்து பிரச்சனைகள் ஏற்படலாம்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு ஜனவரி 17, 2023 க்கு பிறகு பெயர்ச்சி ஆனதும் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். நீங்கள் உங்கள் மீது இருக்கும் தவறுகளை உணர்ந்து நீண்ட கால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை முன் கொண்டு வருவீர்கள். உங்களுக்கு முடிவுகள் எடுப்பதில் நல்லத் தெளிவு கிடைக்கும். மொத்தத்தில் ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
Prev Topic
Next Topic