![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | ஐந்தாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் (80 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்சி ஆகிறார். குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வருவார்கள். உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் ஆயுர்வேதம் அல்லது மூலிகை வைத்தியத்தால் குணமாகிவிடுவீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது நல்ல நேரம். புது வேலை வாய்ப்புகள் பெரும் விடயங்களில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் பதவி, சம்பளம் மற்றும் போனஸ் போன்றவற்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், திருமண முயற்சிகளைச் செய்ய ஏற்ற நேரமாக இந்த பாகம் இருக்கும். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம்.
புது வணிகத்தை தொடங்கும் திட்டம் உங்களுக்கு இருந்தால், அது சார்ந்த முயற்சிகளை எடுக்க இது நல்ல நேரம். ஆனால், அதில் நீங்கள் பெரும் அளவு வெற்றியைப் பெற 1.5 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் ரியல் ஈஸ்டே கமிசன் ஏஜெண்டுகள் நல்ல நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
Prev Topic
Next Topic