குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

நிதி / பணம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

தற்போது நிகழும் குரு பெயர்ச்சியால் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். உங்களுக்கு செலவுகள் விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கும். உங்கள் வருமானம் சீராக இருந்தாலும், உங்கள் நிதித் தேவைகளை சந்திக்க போதுமானதாக இல்லாமல் போகலாம். நீங்கள் வீட்டு பராமரிப்பு, புது வீடு வாங்குவது, திருமணம் போன்ற சுப நிகல்திகள் நடத்துவது போன்ற காரணங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உங்கள் நிதித் தேவைகளுக்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டியத் தேவை ஏற்படலாம். ஆனால், இந்த குரு பெயர்ச்சி காலத்தின் பாகம் 5 மற்றும் 5 இல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகம் ஏற்படலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் பணம் கடன் வாங்குவது மற்றும் பணம் கடன் தருவது போன்ற விடயங்களைத் தவிர்த்து விட வேண்டும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் இருக்கும் குருவை பார்வை இடுவதால் நீங்கள் பீதி அடைந்தும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். ஜனவரி 17, 2023 ஐ நீங்கள் அடைந்ததும், சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் பலத்தால் விடயங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெரும்.

Prev Topic

Next Topic