குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை நல்ல நேரம் (80 / 100)


இந்த பாகத்தில் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதி சரமாய் ஏப்ரல் 27, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு சனி பகவான் ஜூன் 4, 2022 அட்ன்று வக்கிர கதி அடைந்து ஜூலை 14, 2022 அன்று மீண்டும் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்தும் முயற்சியில் வெற்றிப் பெறுவீர்கள். இந்த பாகத்தில் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால், ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற காரணங்களால் உங்கள் சேமிப்பு கரையும் என்பதால் நீங்கள் உங்கள் செலவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக காத்திருந்த தம்பதியினர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் முன்னேற்றத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மேலாளர் மற்றும் உடன் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வைப் பெறுவீர்கள். வணிகத்தில் இருப்பவர்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கக் கூடிய நல்ல நேரமாக இது இருக்கும். பண வரத்து உங்களுக்கு பல வழிகள் இருந்தும் கிடைக்கும்.
புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைத் தரும். இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைத்தாலும் நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.



Prev Topic

Next Topic