![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | உடல்நலம் |
உடல்நலம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், உங்கள் உடல் நலம் இந்த குரு பெயர்ச்சி காலத்தின் போது பாதிக்கப்படலாம். நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிக்க நேரலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவார். கேது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தை பாதிப்பார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.
நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அதனை, ஜனவரி 17, 2023 வரை காத்திருந்து பின்னர் செய்து கொள்ள முயற்சிக்கலாம். ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் உங்கள் மனோ பலம் அதிகரிக்கும். உங்களுக்கு ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நாள்பட்ட வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர வாய்ப்புகள் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், ஆயுர்வேத மருத்துவம் அல்லது எளிமையான மூலிகை மருத்துவத்தாலேயே நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
Prev Topic
Next Topic