குரு பெயர்ச்சி (2022 - 2023) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

காதல்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், ஜூலை 29, 2022 க்கு முன் விரைந்து செயல்பட்டு திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்போது இருந்தே நீங்கள் குருவின் பலத்தை இழக்கத் தொடங்குவீர்கள்/ நீங்கள் மேலும் காத்திருக்கலாம் என்று நினைத்தால், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள 5 ஆண்டுகள் வரையும் ஆகலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் பிறந்த சாதக பலனோடு மட்டுமே உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.


ஜூலை 29, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரையிலான காலகட்டம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதால் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மேலும் உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் காதல் குறைந்தே காணப்படும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிவதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவும்.
ஜனவரி 17, 2023 க்கு பிறகு சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலம் குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிந்து திருமணமும் செய்து கொள்வீர்கள்.

Prev Topic

Next Topic