![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் (25 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இந்த பாக காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்களால் உங்களுக்கு ஏற்படும் அவமானம் மற்றும் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சீரணிக்க முடியாமல் போகலாம். புது வேலை வாய்ப்பு சார்ந்த முயற்சிகளில் நீங்கள் வெற்றிப் பெற முடியாமல் போகலாம்.
இந்த பாக காலகட்டத்தில் உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட நேரலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிக்க நேரலாம். புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வீட்டை மாற்ற இது ஏற்ற நேரம் இல்லை.
உங்கள் குடியேற்ற மற்றும் விசா பலன்கள் தேக்கம் அடையலாம். மேலும் மோசமான சூழலில், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் நிலையம் ஏற்படலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுங்கள். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து நீங்கள் முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic