![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி 17, 2023 வரை கோச்சார கிரகங்களில் நிலைகளால் உங்களால் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் மார்ஜின் வர்த்தகம், லிவரேஜ் நிதிகள் மற்றும் ஆப்சன் வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது. ஜனவரி 17, 2023 வரை முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் எந்த விதமான ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் வளர்ச்சித் தரக் கூடிய முதலீடுகளும் உங்களுக்கு பெரும் அளவு இழப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம்.
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். இதனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தை காண்பீர்கள். ஜனவரி 17, 2023 க்கு பிறகு நீங்கள் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்க முயற்சிக்கலாம். ஆனால் ஏப்ரல் 21, 2023 க்கு முன் உங்கள் பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் நீங்கள் அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic