குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வேலை / உத்தியோகம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

இப்போது உங்களுக்கு சாதகமான குரு அம்சங்களை நீங்கள் இழப்பதால், உங்கள் அலுவலகத்தில் அதிக சவால்களை சந்திப்பீர்கள். அதிகரிக்கும் வேலை பளு மற்றும் அலுவலக அரசியலால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். உங்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 வாக்கில் மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்வது கடினமான ஒன்றாக இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அக்டோபர் அல்லது நவம்பர் 2022 வாக்கில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம்.


நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து, உங்கள் அலுவலக சூழலை சமாளித்து இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. புது வேலை கிடைக்கும் முயற்சியிலும் உங்களால் வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். அப்படியே உங்களுக்கு வேலை கிடைத்தாலும், அந்த புது உத்தியோகம் உங்களுக்கு அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகும் வரை காத்திருப்பது தான்.
தற்போது இருக்கும் உத்தியோகம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலோ அல்லது தற்போது உங்களுக்கு வேலை இல்லை என்றாலோ, ஜனவரி 17, 2023 க்கு பிறகு நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும். உங்கள் புது வேலை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு நீண்ட காலத்திற்கு நல்ல வளர்ச்சியையும் தரும். குடியேற்றப் பலன்கள் அல்லது கன்சல்டன்சி நிறுவனத்திடம் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், ஜனவரி 17, 2023 க்கு பிறகு அதில் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Prev Topic

Next Topic