குரு பெயர்ச்சி (2022 - 2023) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வணிகத்தில் இருந்த வளர்ச்சியை முற்றிலும் பாதித்து இருந்திருப்பார். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், மார்ச் 2022 வாக்கில் உங்கள் வங்கி கணக்கும் திவாலாகும் நிலையில் இருந்திருக்கும். நீங்கள் கடந்த சமீப நாட்களில் பண விடயங்களில் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள்.


ஏப்ரல் 13, 2022 முதல் உங்கள் மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். கண்டாக சனியின் தாக்கம் குறையும். நீங்கள் ஒரு ஒளி பாலத்தை காண்பீர்கள். புது முதலீட்டாளர்கள் அல்லது தொழில் பங்குதாரர்களிடம் இருந்து உங்களுக்கு நிதி கிடைக்கும். உங்கள் புதுமையான யோசனைகள் உங்கள் வணிக வளர்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
நல்ல பணவரத்தை ஏற்படுத்தக் கூடிய நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் லாபம் அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். உங்கள் புது தயாரிப்புகள் சந்தியில் மக்களின் கவனத்தையும் ஊடகத்தையும் ஈர்க்கும். உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

Prev Topic

Next Topic