குரு பெயர்ச்சி (2022 - 2023) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

கடந்த ஒரு ஆண்டு காலமாக நீங்கள் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பங்களால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கும். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் ஏப்ரல் 13, 2022 முதல் சஞ்சரித்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளியில் வர உதவி செய்வார். நீங்கள் மது அல்லது புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால், அந்த பழக்கங்களில் இருந்து இப்போது முற்றிலும் வெளியில் வந்து விடுவீர்கள்.


கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் உணருவீர்கள். பரிச்சையில் சிறப்பாக செயல்படுவீர்கள், குறிப்பாக பாகம் 1, 4 மற்றும் 5 இல். சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உருனையாக இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் தீசிஸ் மே 2022 அல்லது நவம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிடும். நீங்கள் உங்கள் பட்டப்படிப்பையும் முடித்துவிடுவீர்கள்.

Prev Topic

Next Topic