![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | ஐந்தாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை கடுமையான உழைப்போடு நல்ல அதிர்ஷ்டங்களும் (75 / 100)
ஜனவரி 17, 2023 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கும். எனினும், இதனால் உங்களுக்கு எதிர்மறைப் பலன்கள் இப்போது எதுவும் இருக்காது. குருவின் பலத்தால் நீங்கள் சிறப்பான பாதுகாப்பையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் இந்த பாகத்தில் பெறுவீர்கள். உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ளதால், நீங்கள் உங்களுக்கு இருக்கும் வேலைகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் உங்களது வேலைகளை நீங்கள் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள் மேலும் அதற்கான வெகுமதிகளையும் இந்த பாகத்தில் பெறுவீர்கள்.
போதிய தூக்கம் இல்லாமல் இருக்கும். நீங்கள் அதிக நார் மற்றும் புரத சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப சூழல் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் உங்கள் புது வீட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும். உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பண வரத்து போதிய அளவு இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்கும். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic