![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
கடந்த 6 மாதங்களாக உங்களுக்கு கடன் அதிகரித்ததால், நீங்கள் உங்கள் நிதி நிலையில் மோசமான பாகத்தை சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் 401-K அல்லது பிற ஓய்வூதிய கணக்குகள், புரோக்கரேஜ் மூலம் உங்கள் பணத்தை இழந்திருக்கலாம். உங்கள் முதலீடுகள் மிகவும் குறைவாக இருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் நிதி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைத் தந்து இப்போது விடயங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு மாற உதவி செய்வார்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக குறைப்பீர்கள். உங்கள் அசையா சொத்துக்களை விற்று உங்கள் கடனை அடைத்துவிடவும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் பேசி நீங்கள் செட்டில்மென்ட் செய்யவும் முயற்சிப்பீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு சிறப்பான உதவிகளை செய்வார்கள். நீங்கள் முன்பே வேலை பார்த்த உங்கள் நிறுவனத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் சம்பளப் பணமும் உங்களுக்கு கிடைக்கும். அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் தொகையைப் பெறுவீர்கள்.
உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள். உங்கள் மருத்துவ மற்றும் பயண செலவுகள் குறையும். உங்கள் வங்கிக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் குறைந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். மோதத்ஹ்தில் உங்கள் நிதி நிலை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். பாகம் 1, 4 மற்றும் 5 இல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic