![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை நல்ல நேரம் (75 / 100)
மிகவும் மோசமான அஷ்டம குரு பாகத்தை நீங்கள் கடந்து விட்டீர்கள்! வாழ்த்துகள்! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு காலத்தை முடித்து விட்டீர்கள்.
வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக சரியாகி விடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். நீங்கள் உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பீர்கள். சுப காரியங்களை திட்டமிட்டு நடத்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ இது நல்ல நேரமாக இருக்கும்/ சட்டு ரீதியான விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்து இருந்தால், உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், அது உங்களுக்கு கிடைக்கும். தொழில்முனைவோர்களுக்கு இது ஒரு சிறப்பான திருப்பமாக இருக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள். நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விசா கிடைக்கும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் கடன்கள் குறையும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் லாபம் தரும் வகையில் இருக்கும். புது வீடு வாங்க மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic