குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (85 / 100)


இந்த பாகத்தில் குரு உங்கள் பாக்கிய ஸ்தானத்தின் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் உடல்நலத்தை மீண்டும் பெறுவீர்கள். இருப்பினும் உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், காதலிக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் செய்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக இது நல்ல நேரம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். IVF அல்லது IUI போன்ற எந்த மருத்துவ சிகிச்சையும் உங்களுக்கு நல்லப் பலனைத் தரும்.


உங்கள் முதலாளி உங்கள் வளர்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். நல்ல சம்பள உயர்வோடு அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். மேலும் பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது வேகமான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். தொழில்முனைவோர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். வெளிநாட்டிற்கு குடிய்பெயர இது சிறப்பான நேரம்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண மழை உங்களுக்கு பொழிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயருவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு பிரபலமாகவும் ஆவீர்கள்.



Prev Topic

Next Topic