குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை உடல்நலம் மற்றும் உறவுகளுடன் பிரச்சனைகள் (40 / 100)


இந்த பாகத்தில் சனி பகவான் உங்கள் களத்திற ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி ஆகிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைதுணைக்கும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். வயிற்றில் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம்.
நீங்கள் உங்கள் பொறுமையாய் இழந்து கடுமையான வார்த்தைகளை பேசிவிட நேரலாம். நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து பிரச்சனைகளை சமாளிக்க முயற்சிக்க வேண்டும். உங்களுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுங்கள். நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. நீங்கள் பொறுமையாக இருந்தால், உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தானாகவே குறைந்துவிடும்.


இது 4 – 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய கால சோதனை காலமாக உங்களுக்கு இருக்கும். உங்கள் உடல்நலத்திற்கும் உறவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு அலுவலகத்தில் அல்லது நிதி நிலையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது விரைவாக சரியாகிவிடும்.


Prev Topic

Next Topic