![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | ஐந்தாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை சில நிவாரணம் (35 / 100)
வாழ்த்துகள். நீங்கள் ஜென்ம சனி காலத்தை முற்றிலுமாக கடந்து விட்டீர்கள். மார்ச் 28, 2025 வரை நீங்கள் ஏழரை சனி காலத்தின் இறுதி பாகத்தில் இருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஜென்ம சனியை ஒப்பிடும் போது இப்போது தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் ராகு 4 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில பிரச்சனைகளை இந்த பாகத்தில் உண்டாக்குவார்கள்.
உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும். உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் எந்த நல்ல நிவாரணத்தையும் இப்போது எதிர்பார்க்க முடியாது. திருமணம் ஆன தம்பதியினர் கடுமையான காலகட்டத்தை சந்திப்பார்கள். காதலர்கள் பிரிந்துவிட முயற்சி செய்வார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு நடந்த திருமணம் நிச்சயம் இரத்தாகும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், இப்போது தற்காலிகமாக உங்களுக்கு ஒரு உத்தியோகம் கிடைக்கும். உங்களுக்கு முந்தைய உத்தியோகத்தை விட இப்போது சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை முடிக்க நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களால் எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு இருக்கும் கடன்களில் இருந்து வெளியில் வருவதில் கடினமான நேரம் நிலவலாம். இதற்கு முக்கிய காரணம் வட்டி விகிதம் தான். நீங்கள் அசலை விட வட்டி கட்டவே அதிக பணத்தை செலவிடுவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ரிஸ்க் உள்ள முதலீடுகளை தவிர்த்துவிடுங்கள்.
Prev Topic
Next Topic