குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை அனைத்திலும் பிரச்சனைகள் (15 / 100)


குரு, சனி பகவான, ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்க மாட்டார்கள். இந்த சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விடயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். நீங்கள் உண்டல் உடல்நலம், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இப்பொது உங்கள் ஆரோக்கியம், குடும்பம் அல்லது உறவை தவற விட்டால், மீண்டும் உங்களால் பெறமுடியாமலேயே போகலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். முடித்த வரை தொலைதூர பயணம் மற்றும் இரவ நேரத்தில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள்.
எந்த பலனும் இன்றி நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் அலுவலகத்தில் அல்லது சமூக வாழ்க்கையில் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். உங்களிடம் இப்போது இருப்பதை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றால், அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். புகை மற்றும் மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். கட்டிடம் கட்டத் தொடங்குவது அல்லது இடம் / வீடு வாங்குவது அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். எந்த விதமான பங்குச்சந்தை வர்த்தகம் அல்லது ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தையும் தவிர்த்துவிடுங்கள்.


கடவுள் வழிபாடு, தியானம் செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic