![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை கலந்த பலன்கள் (55 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவார்கள். உங்களுக்கு இந்த பாகத்தில் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளில் சற்று முன்னேற்றம் ஏற்படும். ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று நீங்கள் உங்களுக்கு இருக்கும் கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். ஆனால் உங்களால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இப்போது எதிர்பார்க்க முடியாது. குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.
சட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் உத்தியோக அழுத்தம் மிதமாகவே இருக்கும். உங்கள் நிதி நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆனால் மோசமான நிலைக்கும் போகாது. நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் சார்ந்த விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து மாதாந்திர தவணையை குறைக்க முயற்சி செய்யலாம். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்தும் நீங்கள் விலகி இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீக்னால் உங்கள் பங்குகளை மூடிவிட முயற்சி செய்யலாம். ஆனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் புதிதாக முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic